சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தாதோர் யாரும் இல்லை என்று கூறும் அளவிற்கு வளர்ந்துவிட்டோம். பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை, அவை உருவான காலக்கட்டம் முதலே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பல ஆண்டுகளாக இந்த சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு, போர் அடித்திருக்கலாம். அவ்வாறு புதிதாக வலைத்தளங்களை தேடுவோருக்கு இந்த தகவல் நிச்சயம் பயனுள்ளதாக அமையும்
* எல்லோ(Ello)
விளம்பரம் இல்லாத வலைத்தளம். இசையமைப்பாளர்கள், கலை ஆர்வலர்கள், வடிவமைப்பாளர்கள், புகைப்பட வல்லுநர்கள் உள்ளிட்டோர் ஒரு சமூகமாக இயங்கலாம்.

* பின்ட்ரஸ்ட்(Pinterest)
மிகவும் பிரபலமான சமூக வலைத்தளம். மிகவும் சமீபத்திய புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படும் தளம். நாம் விரும்பும் அனைத்துவிதமான தலைப்புகளிலும் புகைப்படங்கள் காணப்படுகிறது. புகைப்படங்கள் பகிர்தலுக்கான பிரத்யேக தளம்.

* பாத்(Path)
எளிமையாக பயன்படுத்தக் கூடியது. புகைப்படங்கள் பகிரலாம். மெசேஜ் அனுப்பலாம். தனிப்பட்ட நபர்களுடன் சாட் செய்ய பிரைவேட் வசதி உண்டு. ஆனால் தங்கள் நட்பு வட்டாரத்தில் 150 பேர் மட்டுமே வைத்திருக்கலாம்

* நெக்ஸ்டோர்(NextDoor)
ஜியோகிராஃபிக் லொகேஷனை வைத்து, நாம் இருக்கும் இடத்தை சுற்றியுள்ளவர்களுடன் நட்பு வட்டாரத்தை உருவாக்கலாம். அதில் நாம் விருப்பமான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

* அண்டாப்டு(Untappd)
சமீபத்திய சமூக வலைத்தளம். விருப்பமான பார்கள் குறித்தும், அங்கு அருந்தும் சிறப்பான பான வகைகள் குறித்தும் பகிரலாம். பீர் விரும்பிகளுக்கு ஏற்ற இடம்.

0 comments:
Post a Comment