Monday, November 13, 2017

கூகுள் வழங்கும் புதிய ஆப் Files Go

கூகுள் நிறுவனம் ஃபைல்ஸ் கோ (Files Go) என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் அண்மை காலமாக பல புதிய மொபைல் அப்ளிகேஷன்களை அறிமுகம் செய்துவருகிறது. டெஸ் என்ற மொபைல் வாலட் அப்ளிகேஷன், கூகுள் அசிஸ்டெண்ட் அப்ளிகேஷன் ஆகியவை தற்போது கிடைக்கின்றன.

இந்த வரிசையில் கூகுள் நிறுவனம் விரைவில் களமிறக்க இருக்கும் அப்ளிகேஷன் ஃபைல்ஸ் கோ (Files Go). இந்த அப்ளிகேஷன் ஃபைல் மேனஜர் மற்றும் ஃபைல் ஷேரிங் வசதியை அளிக்கும் அப்ளிகேஷன் ஆகும்.

இந்த அப்ளிகேஷன் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டும் பீட்டா (Beta) வெர்ஷனாக கிடைக்கும்.

0 comments:

Post a Comment